சுஷாந்த் காதலிக்கு கொலை-பலாத்கார மிரட்டல்.. போலீசில் புகார்..

ற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் மும்பை போலீ ஸார் விசாரணை நடத்தினர். சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார். அதனால் அவர் தனியாக அறைக்குள் கதறி அழுவார்’ என வாக்குமூலத்தில் பல்வேறு பரபரப்பான கருத்துக்கள் தெரிவித்தார்.

இந்நிலையில் ரியாவை நெட்டீஸ்ன்கள் திட்டித்தீர்த்தனர். ரியா வாக்குமூலத்துக்கு பிறகு சுஷாந்த் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள்தான் காரணம் என பேச்சு எழுந்தது. இந்நிலையில் தனக்கு கொலை, பலாத்கார மிரட்டல்கள் வருகிறது என்று ரியா இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருகிறார். அத்துடன் மிரட்டல் மெசேஜ்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்துவெளியிட்டிருக் கிறார்.
இதுகுறித்து ரியா இன்ஸ்டாகிராமில்.
’சுஷாந்த்துடன் நகைக்காகவும் பனத்துக் காகவும் பழகியதாக எழுதினார்கள் பொறுத்துக் கொண்டேன், கொலைகாரி, நடத்தை சரியில்லாதவள் என்றார்கள் பொறுமையாக இருந்தேன், தற்போது என்னை தற்கொலை செய்துகொள்ள வேண்டும் இல்லாவிட்டால் கற்பழித்து கொலை செய்வோம் என்று மிரட்டுகி றார்கள். இது குறித்து போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன்’ என குறிப்பிட்டுள் ளார்.