சென்னை:

நெல்லையின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகியோர் கடந்த 23ந்தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், நிராதராவாக உள்ள பணிப்பெண்ணின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதிஉதவி செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  முன்னாள் மேயர், அவரது கணவர் மற்றும் வீட்டு வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை சம்பவம். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளராக இருந்து வந்தவர் மனைவி உமா மகேஸ்வரி (65) . இவர் ஏற்கனவே நெல்லை மாவட்ட மேயராகவும் பணியாற்றி உள்ளார். இவர் கணவர்   முருகசங்கரன் (72). இவர் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர்களுக்கு உதவியாக பணிப்பெண் மாரியம்மாள் (வயது 30) என்ற விதவைப்பெண்  வேலை செய்து வந்தார். இவரும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். மாரியம்மாளுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவரது குடும்பம் வருமானமின்றி நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.