சாந்தனுவின் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ ட்ரெய்லர் வெளியீடு….!

ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ .

இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், இதில் பாக்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி, எடிட்டராக ஜோமின் மேத்யூ, கலை இயக்குநராக நர்மதா வேணி, இசையமைப்பாளராக தரண் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இப்படத்தில் முக்கிய யூ-டியூப் பிரபலம் ஒருவர் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் இதை தனது முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இப்படத்தின் ஏதோ சொல்ல பாடல் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தரன் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் போஸ்டரில் 100 சதவீதம் நாட்டி, 100 சதவீதம் டேஸ்ட்டி என இடம்பெற்றிருப்பதால் அடல்ட் காமெடி படமாக இருக்கும் என்று கமெண்ட் செய்தனர் ரசிகர்கள்.

இத்திரைப்படத்தின் பட்ப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் ட்ரெயலர் வெளியான ஒரு நாளில் 1 மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது. விரைவில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.