வெளியானது பவர் ஸ்டாரின் ‘முருங்கக்காய்’ ஃபர்ஸ்ட் லுக்….!

 

ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் படம் ‘முருங்கக்காய்’ .

இந்தப் படத்தில் நடிகர் மாரிமுத்து, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கழுத்தில் மல்லிகைப்பூ மாலையுடன் கட்டிலில் புதுமாப்பிள்ளை கோலத்தில் படுத்திருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். பால் சொம்பு கீழே கிடக்க முதலிரவு அறையை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.

குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு பிரேம்குமார் சிவ பெருமான் இசையமைக்கிறார். எஸ்.எல்.எஸ் ஃபிலிம்ஸ் சார்பாக எஸ்.ஆர்.ரம்யா இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.