Random image

முஷாரப் மீதான தேச துரோக வழக்கு : அடுத்த மாதம் தினமும் விசாரணை

ஸ்லாமாபாத்

பாக் முன்னாள் அதிபர் முஷாரப் மீதான தேச துரோக வழக்கில் அடுத்த மாதம் 9 ஆம் தேதி முதல் தினம் விசாரணை நடைபெறும் என  சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் கடந்த 1999 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமாரான நவாஸ் ஷெரிப் ஆட்சியைக் கலைத்து விட்டு அதிபரானார்.   இவர் கடந்த 2006 வரை பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தார்.   அந்த சமயத்தில் இவர் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வழக்கு பதியப்பட்டு இவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் மீதுஅப்போதைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) அரசு தேச துரோக வழக்கு பதிவு செய்தது.  இந்த வழக்கு இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.   வழக்க்கை நீதிபதி யவார் அலி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.  நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்ற அமர்வு, “இந்த வழக்கு வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது.   அதன் பிறகு தினமும் இந்த வழக்கின் விசரணை நடைபெற உள்ளது.   வழக்கின் வாதங்கள் விரைவில் முடிவடைய உள்ளதால் வெளிநாட்டி உள்ள முஷாரப்பை உள்துறை அமைச்சகம் எவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் என்பதை தெரிவிக்க வேண்டும்” என கூறி உள்ளது.