பாதுகாப்பு அளித்தால்தான் பாகிஸ்தான் வருவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் நிபந்தனை விதித்து இருக்கிறார்.

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999-ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவர் முஷரப். இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார்

அப்போது, அரசமைப்புச் சட்டத்தை தாற்காலிகமாக முடக்கியதுடன், நூற்றுக்கும்  மேற்பட்ட நீதிபதிகளை அவர் சிறையில் அடைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக, முஷரப் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு,  அவர் மீதான குற்றச்சாட்டு கடந்த 2014-ம் வருடம் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே மருத்துவ சிகிச்சைக்காக அரசின் அனுமதியுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு துபாய் சென்ற முஷ்ரப், அங்கேயே தங்கிவிட்டார். இதையடுத்து அவர் தலைமறைவுக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் முஷரப் அளித்துள்ள மனுவில், வழக்கு விசாரணையை எதிர்கொள்ள பாகிஸ்தான் வர தயாராக இருப்பதாகவும் ஆனால் தனக்கு  தகுந்த பாதுகாப்பை அளிப்பதாக  பாகிஸ்தான் அரசு உறுதியளிக்க வேண்டும்  என்றும் தெரிவித்துள்ளார்.