ஸ்லாமாபாத்

நான் தடை செய்யப்பட்ட லஷ்கர் ஈ தொய்பாவின் தீவிர ஆதரவாளன் என பாக் முன்னாள் அதிகப் முஷ்ரஃப் கூறி உள்ளார்

லஷகர் ஈ தொய்பா என்னும் இஸ்லாமிய பயங்கர வாத இயக்கம் பல நாடுகளில் வன்முறைச் செயல்களை நிகழ்த்தி உள்ளது.  இந்தியாவில் மும்பையில் பல தாக்குதல்களை நிகழ்த்தியதற்கு பொறுப்பேற்றுள்ள இந்த இயக்கத்துக்கு பல நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதில் ஒன்றான பாகிஸ்தானில் அதிபர் முஷ்ரஃப் ஆட்சிக் காலத்தில் தடை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர்  பர்வேஸ் முஷ்ரஃப் தற்போது தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், “ நான் லஷ்கர் ஈ தொய்பாவின் தீவிர அதரவாளன்.  அந்த இயக்கமும் என்னை ஆதரிப்பது எனக்கு தெரியும்.  தற்போது பாகிஸ்தானால் விடுதலை செய்யப்பட்ட ஹஃபீஸ் சையத் காஷ்மீர் விவகாரத்தில் ஈடுபாடு காட்டி உள்ளார்.  அதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.  அப்போது வேறு சில சூழ்நிலைகளால் எனது அரசு அந்த இயக்கத்தை தடை செய்தது.  எனக்கு அப்போது ஹஃபீஸ் சையத் பற்றி முழுமையாக தெரியவில்லை.  அப்போது அவரைப் பற்றி தெரிந்திருந்தால் நான் இந்த இயக்கத்தை தடை செய்திருக்க மாட்டேன்” எனக் கூறி உள்ளார்.

இது இந்தியா உட்பட பல உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.