இசை அமைப்பாளர் ஆதித்யன் காலமானார்

சென்னை,

பிரபல தமிழ் பட இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார். நேற்று இரவு ஐதராபாத்தில் அவர் மரணமடைந்தாக கூறப்படுகிறது.

1992 ம் ஆண்டு அமரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுக இசை அமைப்பாளரான காலடி எடுத்து வைத்தார்.

அவரின்  சொந்த ஊர் தஞ்சாவூர் . முதல் படத்திலேயே வித்தியாசமான இசை மூலம் அனைவரை யும் திரும்பி பார்க்க வைத்தார்.

அந்த படத்தில் வெத்தல போட்ட சோக்குல என்ற கானா பாடலை கார்த்திக்கை பாடவைத்தார். பெரிய ஹிட் ஆனது.

மேலும்,  சீவலப்பேரி பாண்டி , லக்கி மேன் , அசுரன் , மாமன் மகள்  உள்பட 50 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள ஆதித்யன் சில பாடல்களை பாடியுள்ளார். 2003 வரை இசை அமைத்த ஆதித்யன் அதன் பிறகு சமையல் கலை வல்லுனராக கலக்கினார்.

இன்றைக்கும் அவர் சமையல் நிகழ்ச்சிகளை யூ டியூபில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

You may have missed