அப்பாவாகப்போகும் பிரபல இசையமைப்பாளர்….!

பாக்யராஜ் இயக்கத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடித்திருந்த ‘பாரிஜாதம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண் குமார்.

போடா போடி, யாரடி நீ மோகினி, நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர் 2017-ம் ஆண்டு தீக்‌ஷிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஜூன் 21-ம் தேதி அப்பாக்கள் தினத்தன்று தரண் குமாரின் மனைவி தீக்‌ஷிதா கர்ப்பம் தரித்திருக்கும் காலத்தில் எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் முதல் அப்பாக்கள் தின வாழ்த்துகள் என்று தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தீக்‌ஷிதா.