‘சாஹோ’ படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம்…!

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹோ’ இதில்.பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார் . அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார்.

இப்படம் ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் சங்கர்-எஹ்ஸான்-லாய் என்னும் மூவேந்தர்கள் நேற்று படத்தில் இருந்து விலகியுள்ளனர்.அதை தங்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்து உறுதி செய்துள்ளனர்.

தற்போது படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘சாஹோ’ படத்தின் பின்னணி இசைப் பணியை ஜிப்ரான் மேற்கொள்ளவுள்ளார். படத்தின் பாடல்களை வேறொரு இசையமைப்பாளர் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.

கார்ட்டூன் கேலரி