இசையமைப்பாளர் சாம் CS, இசையில், பெரிய பட்ஜெட் படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் தற்போது உலக திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சண்டைப்பயிற்சி இயக்குனர் பீட்டர் ஹெய்ன் இயக்கும் வியட்நாமிஸ் படமான சாம் ஹொய் ( Sam Hoi ) படத்திற்கு இசையமைக்கிறார் சாம் CS.

இது குறித்து இசையமைப்பாளர் சாம் CS கூறியதாவது…மிக மகிழ்ச்சியாகவும் அதே நேரம் கொஞ்சம் பதட்டமாகவும் உள்ளது. தமிழில் கிடைத்த அதே வரவேற்பு உலக ரசிகர்களிடம் இருந்தும் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார் .