வைரலாகும் இசையமைப்பாளர் சாம் -ன் பதிவு….!

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை 3,012 மையங்களில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 மாணவ, மாணவிகள் எழுதினர். சென்னையில் மட்டும் 160 மையங்களில் 47,264 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில் தேர்வு மட்டுமே மாணவர்களின் வாழ்க்கையைத் தீர்மானித்துவிடாது என்பதை உணர்த்தும் விதமாக சென்னையில் உள்ள ஒரு கடையில் ஒரு அறிவிப்பு தொங்கவிடப்பட்டது. அதில், ”அடேய் பசங்களா…. உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு பரீட்சை முக்கியமான விஷயம் அல்ல… ஜாலியா எழுதுங்கடே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.