நாக்பூர்: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய முஸ்லீம் அமைப்பான முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச்சின் ஏராளமான அலுவலக நிர்வாகிகள் காங்கிரசில் இணைந்துள்ளனர்.

தாங்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்பட்டு, புறக்கணிக்கப்படுகிறோம் என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இதுகுறித்து பேசிய அந்த அமைப்பினுடைய நகரத் தலைவர் ரியாஸ் கான், “எங்களின் கோரிக்கைகளை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா ஆகிய இரண்டுமே உதாசீனம் செய்கின்றன.

என்னுடன் சேர்ந்து எங்கள் அமைப்பினுடைய 5000 உறுப்பினர்கள் மற்றும் 20 அலுவலக நிர்வாகிகளும் காங்கிரசில் இணைந்தனர்” என்றார்.

நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர், நானா படோல், இந்த இணைப்பை வரவேற்றுள்ளார்.

– மதுரை மாயாண்டி