ஜெய்ஸ்ரீராம் கூற மறுத்த இஸ்லாமிய சிறுவன் எரித்துக் கொலை : பெற்றோர் தகவல்

ந்தவுலி, உத்திரப் பிரதேசம்

த்திரப்பிரதேச மாநிலம் சந்தவுலி பகுதியில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய சிறுவன் ஜெய்ஸ்ரீராம் என கூற மறுத்ததால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அவர் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு இஸ்லாமியச் சிறுவன் தீக்காயங்களுடன் கடந்த திங்கள் அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 60%க்கு மேல் தீக்காயங்கள் இருந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அவர் தனது வாக்குமூலத்தில், “நான் துதாரி பாலத்தில் நடந்துக் கொண்டு இருந்த போது என்னை 4 பேர் கடத்திச் சென்றனர். அதில் இருவர் என் கையை கட்டிப் போட்டனர். ஒருவர் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றினார். பிறகு அனைவரும் இணைந்து என் மீது தீ வைத்து விட்டு ஓடி விட்டனர்.” என கூறினார்.

அவர் குடும்பத்தினர் அவரை ஜெய்ஸ்ரீராம் என கூறச் சொல்லி அதை மறுத்ததால் எரிக்கப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.

அந்த சிறுவன் நேற்று மரணம் அடைந்துள்ளார் சந்தவுலி காவல்துறை சூப்பிரண்ட் சந்தோஷ் குமார் சிங், “அந்த சிறுவன் வீட்டு பிரச்னை காரணமாக தீக்குளித்துள்ளார். அவர் பொய் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி கூறி உள்ளார். அந்த சிறுவன் இவ்வாறு மாற்றி கூறியது சந்தேகத்தை உண்டாகியது

அதனால் அவர் கூறிய இடங்களில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவை சோதனை செய்தோம். அந்தப் பதிவுகளில் இருந்து அவர் கூறியது போல் எவ்வித சம்பவமும் நிகழவில்லை என்பது தெளிவாகி உள்ளது. மேலும் விசாரணையில் அவர் அந்த இடங்களுக்கு செல்லவே இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது” என கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி