ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் பசு பாதுகாப்பு குழுவினரால் தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மத்தியில் பாரதியஜனதா ஆட்சி பதவியேற்றதிலிருந்து இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதுபோல் இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை எதிர்த்தும் ஆங்காங்கே தாக்குதல்கள்  நடை பெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த 1ந்தேதி மாடுகளை ஏற்றிச்சென்றவர்கள்மீது ஒருகும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தன்று பாரதியஜனதா ஆளும் மாநிலமான ராஜஸ்தானில், ஆழ்வார் நெடுஞ்சாலையில் பசு பாதுகாப்பு அணியை சேர்ந்த ஒரு கும்பல்,  அந்த வழியாக மாடுகளை ஏற்றி வந்த வண்டியை நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர்.

15க்கும் மேற்பட்ட வண்டிகள் அவர்களின்  தாக்குதலுக்கு ஆளானது. இந்த சம்பவத்தில், மாடுகளை ஏற்றிவந்த பெலுகான் என்ற 35 வயதுடைய இளைஞரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. மேலும் மாடுகள் ஏற்றி வந்த வண்டிகளையும் அடித்து நொறுக்கினர்.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பெலுகான்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்தார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து  ஆழ்வார் மாவட்ட கலெக்டர் முக்தானந்த் அகர்வால் கூறியதாவது,

கடந்த 1ந்தேதி கான்  6 வண்டிகளில் மாடுகளை ஏற்றி சென்றுள்ளார்.  அப்போது ஒரு கும்பல் அவர்களை தாக்கியுள்ளது. இதில் காயமடைந்தவர்களுக்க மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, பரோர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட வீரேந்திரசிங் என்பவர் கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாடுகளை ஏற்றி வந்த இஸ்லாமியர்கள் ஹரியானா மாநிலத்தின் நுக் மாவட்டத்த சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது என்றார்.

மேலும்,.1995ம் ஆண்டு விலங்குகள் நல சட்டப்படி, ராஜஸ்தானில் மாடுகள் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.  ஆனால், விவசாய தேவைகளுக்கு கலெக்டர் அனுமதியுடன் மாடுகளை ஏற்றிச்செல்லாம் என்று கூறப்பட்டுள்ளது என்றார்.

தாக்குதலில் ஈடுபட்ட 6 பேர் கும்பல்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை  யாரும்  கைது செய்யப்படவிர்லை என்று பரோர் போலீஸ் அதிகாரி ரமேஷ் சின்சின்வார் கூறினார்.

மேலும் மாடுகளை ஏற்றி வந்தவர்கள் அதற்கான சான்றிதழ் வைத்திருந்தார்களா என்பது தெரிய வில்லை என்றும், துகுறித்து நியாயமான விசாரணை நடைபெறும் என்று கானின் உறுவினர்களிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மத்தியில் பாரதியஜனதா ஆட்சி பதவியேற்ற பிறகு, நாடு முழுவதும் மாடுகள் கொல்லப்படுவது தடை செய்யப்பட்டு வருகிறது.

குஜராத் மாநில சட்டப்பேரவையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று விலங்குகள் பாதுகாப்பு சட்ட திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. அதில், மாடுகளை கொன்றால் ஆயுள்தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற யோகி ஆதித்ய நாத், மாடுகளை வெட்ட தடை விதித்தார். மேலும் அனுமதி இல்லாத ஆடு, மாடு வெட்டும் கூடங்கள், இறைச்சி கடைகள் ஆகியவற்றையும் மூட உத்தரவிட்டார். இது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் சந்தீஷ்கர் மாநில முதல்வர் ராமன்சிங்கும், மாடுகளை கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கர்நாடக அரசு மாடுகளைக் கொல்வதை தடை செய்ததுடன் லாரிகளில் மாடுகளை ஏற்றிச் செல்லவும் தடை விதித்துள்ளது.

தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும் என்று இந்துமுன்னணியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.