ண்டொலி, அசாம்

சாம் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய முதியவர் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்தியாவில் இருந்த் சென்றவர்கள் வாழ்ந்து வந்தனர்.   அங்கு பிழைக்க வழி இல்லாமல் போனதால் அவர்கள் மீண்டும் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தனர்.   ஆனால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக இஸ்லாமிய இனத்தவர்களில் பலர் வெளிநாட்டில் இருந்து ஊடுருவி உள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் பலருக்கு குடியுரிமை வழங்கப் படுவது இல்லை.     அசாம் உள்ளிட்ட பல வடகிழக்கு மாநிலங்களில் இது  போல பலருடைய பெயர் தேசிய குடியுரிமை பட்டியலில் இடம் பெறாமல் உள்ளது.

கவுகாத்திக்கு மேற்கே 70 கிமீ தொலைவில் உள்ள போகோ பகுதியில் சண்டொலி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது.   இங்கு அஷ்ரஃப் அலி என்னும்  இஸ்லாமிய முதியவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.   இவர் 90 வயதை கடந்தவர் ஆவார்.   இவருடைய மற்றும் இவர் குடும்பத்தினர் பெயர் தேசிய குடியுரிமை  பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

அதை எதிர்த்து யாரோ மேல் முறையீடு செய்துள்ளனர்.   அதை ஒட்டி அஷ்ரஃப் அலி  விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.   பொதுவாக குடியுரிமை பட்டியலில் இடம் பெற்ற பிறகு அசாம் வாசிகள் எந்த ஒரு விசாரணையிலும் கலந்துக் கொள்வது இல்லை.  அதைப் போலவே அஷ்ரஃப் அலியும் விசாரணைக்கு செல்லவில்லை.

அதனால் அவருடைய பெயர் குடியுரிமை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.  அவரை அகதிகள் முகாமுக்கு செல்ல உத்தரவிடப்பட்டது.   இது அந்த முதியவரை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது.    மேலும் இதனால் தனது குடும்பத்தினரின் குடியுரிமையும் ரத்து செய்யப்படலாம் என அஞ்சி உள்ளார்.

மனம் உடைந்த அஷ்ரஃப் அலி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.   அவருடைய உயிரற்ற உடல்  அகதிகள் முகாமின் வேலி ஓரம் கிடந்துள்ளது.   இந்த தகவல் பத்திரிகையாளரான ரோகிணி மோகன் மூலம் டிவிட்டரில் பதியப்பட்டு பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இவ்வாறு குடியுரிமை பட்டியலில் பெயர் இல்லாமைக்காக தற்கொலைகள் செய்து கொள்வது அதிகரித்து வருகின்றன.  அஷ்ரஃப் அலி அவ்வாறு தற்கொலை செய்துக் கொண்ட 23 ஆம் இஸ்லாமியர் ஆவார்