பாகிஸ்தான் பொருட்களை தீயிட்டு கொளுத்திய இஸ்லாமிய வியாபாரிகள்

உரி தாக்குதலின் எதிரொலியாக குஜராத்தில் செயல்பட்டுவரும் இஸ்லாமிய வியாபாரிகள் சங்கத்தினர் பாகிஸ்தான் பொருட்களை தீயிட்டு கொளுத்தி அந்த நாட்டுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

gujpak

பாகிஸ்தானில் தயாராகும் பொருட்களான வாசனை திரவியங்கள், மஸ்காரா, குட்கா, சோப்புகள் மற்றும் அங்கு விளையும் தானியங்கள் ஆகியவற்றிற்கு இந்திய முஸ்லீம்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. விழாக்காலங்களில் இவை அதிகமாக விற்பனையாவதும் உண்டு.

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் தீவிரவாதிகள் இந்திய ராணுவ முகாம்களை தாக்கி 18 இந்திய ராணுவவீரர்கள் வீரமரணத்தைத் தழுவ கரணமானதால் பாகிதானுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும்படி இனி பாகிஸ்தானில் விளையும் மற்றும் தயாராகும் பொருட்களை வாங்கவோ விற்கவோ மாட்டோம் என்று அவர்கள் உறுதிமொழி எடுத்தனர். இதன் மூலம் உரி தாக்குதலுக்கு தங்களால் ஆன எதிர்ப்பை பதிவுசெய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் அத்தனை பொருட்களுக்கும் தடை விதிக்கும்படியும் இஸ்லாமிய வியாபாரிகள் சங்கத்தினர் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டனர்.