வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியைச் சேர்ந்த முஸ்லீம் பெண்கள் சிலர், முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றியதற்காக கைகளால் தயார்செய்த ராக்கிகளை மோடிக்கு அனுப்பியுள்ளனர்.

முஸ்லீம் கணவர்கள் உடனடி தலாக் சொல்லி தங்கள் மனைவியரை விவாகரத்து செய்யும் வழக்கத்தை தடை செய்யும் வகையில் முத்தலாக் தடை சட்டத்தை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்திய அரசு.

இதனையடுத்து, தங்களை இந்தக் கொடுமையிலிருந்து விடுவித்தாக கூறி, வாரணாசியை சேர்ந்த முஸ்லீம் பெண்கள், நரேந்திர மோடிக்கு ராக்கி தயாரித்து அனுப்பியுள்ளனர். அவர்கள், நரேந்திர மோடி அனைத்து முஸ்லீம் பெண்களுக்கும் அண்ணன் போன்றவர் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இதை ஒரு விளம்பர நடவடிக்கை என்று விமர்சித்துள்ளது. இதுபோன்ற செய்ய சில முஸ்லீம்களை கட்டணம் கொடுத்து அமர்த்திக் கொள்கின்றனர் சம்பந்தப்பட்டவர்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களை எளிதாக செய்வார்கள் என்று அந்த அமைப்பு விமர்சனம் செய்துள்ளது.