தராபாத்

ஸ்லாமியரகள் இந்தியாவின் வாடகைதாரர்கள் இல்லை, பங்குதாரர்கள் என இஸ்லாமியர் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி கூறி உள்ளார்.

ஐதராபாத் தொகுதி மக்களவை உறுப்பினராக இஸ்லாமியர் கட்சியான அகில இந்திய மஜிலிஸ் ஈ இத்தாதுல் முஸ்லிமின் (ஐமிம்) கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்த தொகுதியில் தொடர்ந்து நான்காம் முறையாக வெற்றி பெற்றுள்ளார். பசுப் பாதுகாப்பு என்னும் பெயரில் இஸ்லாமியர்கள் கும்பல்கொலை செய்யப்படுவதாக இவர் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 300 தொகுதிகளுகு மேல் வெற்றி பெற்றுள்ளதால் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப் படுவார்கள் எனவும் அவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படும் எனவும் பலரும் கருத்து கூறி வருகின்றனர். ஐதராபாத் நகரில் உள்ள புகழ்பெற்ற மெக்கா மசூதியில் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு விழா நடைபெற்று வருகிறது.

அந்த விழாவில் கலந்துக் கொண்டு பேசிய ஓவைசி, “நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றுள்ளதால் இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டாம். மோடியால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் அரசியலமைப்பு சட்டம் நமக்கு அளித்துள்ள உரிமைகளை பறித்துக் கொள்ள முடியாது.

இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் பங்குதாரர்கள், வாடகைதாரர்கள் இல்லை. இதை மோடி புரிந்துக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி இஸ்லாமியர்களுக்கு இந்த நாட்டில் சம உரிமை உண்டு. அதை மறுக்க மோடியால் முடியாது. எனவே இஸ்லாமியர்கள் மோடியின் வெற்றியைக் கண்டு பயம் கொள்ள தேவையில்லை.” என கூறி உள்ளார்.