ஏழை இந்துவின் இறுதி ஊர்வலத்தை நடத்திய இஸ்லாமியர்கள்

புலந்த்ஷெகர்

த்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷெகர் நகரில் மரணடைந்த ஒரு ஏழை இந்துவின் இறுதி  ஊர்வலத்தை இஸ்லாமியர்கள் நடத்தி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷெகர் என்னும் நகரம் உள்ள்து.  அங்கு வசித்து வந்த ஏழை ரவிசங்கர் மரணம் அடைந்துள்ளார்.

அவர் குடும்பத்தினரிடம் சடலத்தை எரியூட்ட எடுத்துச் செல்லவும் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.   அருகில் இருந்தோர் யாரும் கொரோனா அச்சத்தால் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்ளப் பயந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த ஊர் இஸ்லாமியர்கள் தங்களுக்குள் பணம் வசூலித்து ரவிசங்கரின் இறுதி ஊர்வலத்தை அவர்களே நடத்தி உள்ளனர்.  அவர்கள் வட இந்திய வழக்கப்படி இறுதி ஊர்வலத்தில் “ராம் நாம் சத்ய ஹே” எனக் கோஷமிட்டு எடுத்துச் சென்றுள்ள்ன்ர்.

இந்த வீடியோ டிவிட்டரில் வெளியாகி தற்போது வைரலாகி உள்ளது.

நமது வாசகர்களுக்காக அந்த வீடியோ இதோ