புல்சந்தர்:

த்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களை அந்த பகுதி இஸ்லாமிய மக்கள் மலர்தூவி வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

கடந்த 14ந்தேதி அன்று  உத்திரபிரதேசத்திலுள்ள மொராதாபாத் பகுதியில் கொரோனாவில் இறந்து போன நபரின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தும் நோக்கில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள் ஆகியோர் அவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர்.

ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் மீது கற்களை வீசி அந்த வாகனங்களை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மருத்துவர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களை புல்சந்தர்  இஸ்லாமிய மக்கள் மலர்தூவி வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.