ராமர் கோயில் கட்டுவதை இஸ்லாமியர்கள் எதிர்க்கவில்லை” : காங்கிரஸ் – அமைச்சர் ஜமீர் அகமது கான்

யோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அங்கு கோயில், மசூதி இரண்டும் கட்ட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான ஜமீர் அகமது கான் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்ட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இவர், ட, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  அங்கு கோயில், மசூதி இரண்டும் வேண்டும்” தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒருபுறம் மசூதியும், மற்றொருபுறம் ராம் கோயில் அமைத்துக் கொள்ளலாம். நமக்கு சமாதானம்தான் தேவை.  இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அதைப்பற்றி நாம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. உச்சநீதிமன்றத்தில் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.

லோக் சபா தேர்தலுக்காக பாஜக இப்பிரச்சனையை வைத்து அரசியல் செய்கிறது. நான்கரை ஆண்டுகாலம் கழித்து இப்போது இப்பிரச்னைப்பற்றி பேசுவதற்கு காரணம் என்ன இதுதான்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

 

 

<p>

 

Leave a Reply

Your email address will not be published.