மும்பை :

காராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் ஆளுநர் மாளிகையில் பணி புரியும் ஊழியர்களும், அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் வெள்ளிக்கிழமை அன்று தொழுகை நடத்துவது வழக்கம், கொரோனா காரணமாக இந்த மசூதியில் தொழுகை நடத்த யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இந்த மசூதியில் தொழுகை நடத்த அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்கு அங்குள்ள ராஸா அகாடமி என்ற அமைப்பு கண் டனம் தெரிவித்துள்ளது.

“கடந்த 50 ஆண்டுகளாக இந்த மசூதியில் தொழுகை நடத்தி வருகிறோம், ஆனால் இப்போது தொழுகை நடத்த அனுமதிக்க வில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை” என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

“இந்த மசூதியில் தொழுகை நடத்த நிறைய பேர் வந்ததால் கொரோனா அச்சம் காரணமாக வெளிஆட்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ராஜ்பவனில் பணியாற்றும் ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர்” என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

– பா. பாரதி