காங். தலைவர் ராகுலுக்கு முஸ்லீம் லீக் அகில இந்திய தலைவர்கள் வாழ்த்து

டில்லி,

கில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்திக்கு முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய  தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அகில இந்திய  காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  ராகுல்காந்தி கடந்த 16ந்தேதி பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ராகுல்காந்தி, போட்டியின்றி  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து,  19 ஆண்டுக்காலமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு  தலைமைப் பதவி வகித்து வந்த  சோனியா காந்தி,  ராகுல்காந்தியிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

ராகுல்காந்தி தலைமை பொறுப்பை ஏற்றதை காங்.தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையில், தலைவர் பொறுப்பேற்ற ராகுலுக்கு பிரதமர் மோடி உள்பட  அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்  அகில இந்திய தலைவர்கள்  ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்துக்களையும் தங்களின் நிரந்தர ஆதரவையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.