கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்: விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

சென்னை: கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருமாறு விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருமாவளவன் கூறி உள்ளார்.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கூட்டம் அசோக் நகரில் நடைபெற்றது. அப்போது பேசிய கட்சி தலைவர் தொல் திருமாவளவன், சட்டமன்ற தேர்தலில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து அவர் தெரிவித்து உள்ளதாவது: தேர்தல் தொடர்பாக விசிக இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை. தொடர்ந்து திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறோம்.

வேட்பாளர் குறித்த முடிவுக்கும் மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று திமுகவுடன் நடைபெற்றது. இன்று இரவு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தான் நாம் இன்னும் பங்கீடு குறித்து பேசி வருகிறோம் என்று பேசியுள்ளார்.