மதுரை:

மாமூல் வாங்கும் போலீசார்மீது கண்டிப்பாக எப்ஐஆர் போட வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு மதுரை உயர்நீதி மன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் காவல்துறையினரின் மாமுல் வாங்கும் கேவலமான நடவடிக்கை அதிகரித்து உள்ளது. சாலையோரங்களில் பூ, பழம் விற்கும் சாதாரண தொழிலாளி முதல், தண்ணீர் பிரச்சினையால் தத்தளிப்போர் வீடுகளில் போர் போடுபவர்களை வரை அனைத்து தரப்பினரிடமும் கையேந்தி வருகிறார்கள்.

போலீசாரின் இந்த கேவலமான நடவடிக்கை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல வணிகர்கள் மாமுல்  வாக்கும் போலீசார் மீது புகார்கள் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

இந்த நிலையில்,  கடைகளில் மாமூல்- அன்பளிப்பு வாங்கும் போலீஸார் மீது கண்டிப்பாக எப்ஐஆர்.போட வேண்டும் என்றும், இதை    உள்துறை செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், காவல்துறையினர், உணவகங்கள், மார்க்கெட்டுகள், காய்கறி சந்தைகள், மீன் மார்க்கெட்டுகள், மட்டன் கடைகள், சிக்கன் கடைகள் உள்பட வணிக தளங்களில் மாமூல் மற்றும் அன்பளிப்பு வாங்கும் போலீசாருக்கு எதிராக எப்ஐஆர் போட வேண்டும் என்றும் அதனை உள்துறை செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.