இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58ஆக உயர்வு… மத்தியஅரசு

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை  58ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து பரவிய  உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட உலக நாடுகளிலும் கால் பதித்துள்ளது.  இது  கொரோனாவில் 2வது அலை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில்  இந்தியா திரும்பியவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தொற்று அறிகுறி உள்ளவர்களின்   ரத்த மாதிரிகள், உயர்தர ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உருமாறிய கொரோனா தொற்று குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், 58 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாகமத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதன்முதலாக கடந்த டிசம்பர் மாதம் 29ந்தி அன்று  இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது, 58 பேராக உயர்நதுள்ளது.

உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.