டில்லி.

ஸ்லாமியர்களின் முத்தலாக் சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில்  தொடர் விசாரணை நடை பெற்று வருகிறது.

இஸ்லாமிய சமுதாயத்தில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் பலதார திருமணத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளையும் அதனுடன் இணைத்து சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.

முத்தலாக் சட்டம் குறித்து  தலைமை நீதிபதி கெஹர் தலைமையில்  5 மதத்தை சேர்ந்த நீதிபதி களின் அரசியல் சாசன பெஞ்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

நேற்றைய விசாரணையின்போது, முத்தலாக் என்பது இஸ்லாமியர்களின்  1400 ஆண்டு கால நம்பிக்கை என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பாக ஆஜரான முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் வாதாடினார்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியஅரசு வாதாடியது.

இன்று ஆறாவது நாளாக விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது, முத்தலாக்’குக்கு பெண் மறுப்பு தெரிவிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.

முத்தலாக்குக்கு எதிராக ஒரு பெண் மறுப்பு தெரிவிக்க முடியுமா? என்பது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.