ராமநாதபுரம்:

சும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் அவர்களின் 112வது பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, கழக தலைவர்  மு.க.ஸ்டாலின்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன்னில் ஸ்டாலின் மரியாதை

பசும்பொன் கிராமம்முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை நிகழ்வு இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணி அளவில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.

அதைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேவர் சிலைக்கு மரியாதை செய்ய பசும்பொன் கிராமம் வந்தடைந்தார். அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என்நேரு,  எம்.எல்.ஏ.க்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, மதுரை மூர்த்தி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக   மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். அப்போது,  சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதனை பொடுட்படுத்தாமல் குடையை பிடித்தபடி சென்று மரியாதை செய்தார்.

மதுரையில் இருந்து பசும்பொன் கிராமத்திற்கு செல்வதற்கு முன்னதாக மதுரை வண்டியூரில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.