டெல்லி: எம்பிக்கள் இடைநீக்கம், ஜனநாயக இந்தியாவை முடக்கும் செயல் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசின் வேளாண் மசோதா மீது ராஜ்யசபாவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அமளி நிலவியது. இந்த அமளியில் ஈடுபட்ட  எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந் நிலையில், எம்பிக்கள் இடைநீக்கம், ஜனநாயக இந்தியாவை முடக்கும் செயல் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: தொடக்கத்தில் மவுனம் சாதிப்பதன் மூலமும், பின்னர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதன் மூலமும், கறுப்பின விவசாயச் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளுக்கு கண்மூடித்தனமாகத் திருப்புவதன் மூலமும்   ஜனநாயக இந்தியாவை முடக்கும் செயல் தொடர்கிறது.

எல்லாம் அறிந்த அரசாங்கத்தின் முடிவற்ற ஆணவம் முழு நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று தமது டுவிட்டரில் அவர் கூறி உள்ளார்.