அலகாபாத்,
முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்று அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
முத்தலாக் என்பது சட்டவிரோதம் என அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அலகாபாத் உயர்நீதி மன்றம்
அலகாபாத் உயர்நீதி மன்றம்

 
இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்படி மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் சொல்ல வேண்டும் என்பது அவர்களின் மத கோட்பாடு. ஆனால், இந்த மத கோட்பாடு தவறாக பயன்படுத்தப்படுவதாக இஸ்லாமிய பெண்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள்  நாடு முழுவதும் உள்ள நீதி மன்றங்களிலும்,  உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இதன் காரணமாக புதிய சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
அதில், இந்திய அரசியல் சட்டம் பாலின சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் வலியுறுத்துகிறது. ஆண்–பெண் சமத்துவமும், பெண்களின் கண்ணியமும் விவாதத்துக்கு அப்பாற்பட்டவை. அதில் சமரசத்துக்கு இட மில்லை. ஆண்களின் பழக்கத்தால் பெண்கள் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் எந்த நடைமுறையும் அரசியல் சட்டத்துக்கு முரணானது.
என்று  குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இஸ்லாமிய அமைப்புகள் மத்திய அரசின் இந்த சட்ட திருத்தத்திற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில் படித்த இஸ்லாமியர்கள், முத்தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
muslim
தமிழகத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், கவிஞருமான  சல்மா,  ‘முத்தலாக்’  பல ஆயிரம் இஸ்லாமிய பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கிறது’ என்று கூறி உள்ளார்.
இதுகுறித்த வழக்கு அலகாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதை விசாரித்த நீதிபதி, முத்தலாக்கால் இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்று அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
தனிநபர் சட்டவாரியத்தை விட இந்திய அரசியலைமைப்பு சட்டமே மேலானது என்றும் அலகாபாத் நீதிபதி தெரிவித்துள்ளார்.