இலங்கை கிரிக்கெட் வீரருக்கு பிடித்த சூப்பர் ஸ்டார்..

லங்கை கிரிக்கெட் அணியின் ஸ்பின்னர் பவுலராக திகழ்பவர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. 800 என இதற்கு பெயரிடப் பட்டிருக்கிறது. உலக அளவில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் முத்தையா என்பதால் அதையே டைட்டிலாக வைத்திருக்கின்றனர்.

இப்படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். முன்னதாக சில எதிர்ப்புகள் வந்ததால் விஜய் சேதுபதி நடிக்க வில்லை என்று தகவல் வெளியானது. பின்னர் அதில் நடிப்பதை அவர் உறுதி செய்திருக்கிறார். எம் .எஸ் ஸ்ரீபதி டைரக்ட்டு செய்கிறார்.


முத்தையா சமீபத்தில் பேட்டி அளித்தார் . அப்போது தனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த். பிடித்த படம் சிவாஜி என்றார். வேறு படம் பற்றி கேட்டபோது கமல்ஹாசன் படங்கள் பிடிக்கும் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படம் பிடிக்கும் என்றார்.

You may have missed