பீகார் காப்பக சிறுமிகளுக்கு பாலுறவு கொள்ள கற்பித்த ஆர்வலர் கைது 

பாட்னா

மிசாப்பூர் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் சமூக ஆர்வலர் மது கைது செய்யப்பட்டுள்ளார்.

மஞ்சு வர்மா

 

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் பிராஜேஷ் தாக்குர் என்பவர் நடத்தி வந்த காப்பகத்தில் பல சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திர சேகருக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மது

எதிர்க்கட்சியான காங்கிரசின் போராட்டத்தால் மஞ்சு வர்மா பதவி விலகினார். அதன் பிறகு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டும் மஞ்சு வர்மா கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்பட்டது. அவரை கைது செய்யாதது குறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மஞ்சு வர்மா சரண் அடைந்தார்.

தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய சமூக ஆர்வலரும் காப்பக மேலாளருமான மது என அழைக்கப்படும் சைஸ்தா பர்வீன் சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காப்பக சிறுமிகளுக்கு பாலுறவு கொள்வது குறித்து கற்பித்தவர் என சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும் இவருடைய கைது இந்த வழக்கில் ஒரு முக்கிய நிகழ்வு எனவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.