என் நியமனம் தகுதி அடிப்படையிலேயே நடந்தது! !: ஆளுநருக்கு துணைவேந்தர் துரைசாமி பதில்

மிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் பறிமாறப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றம்சாட்டியுள்ள நிலையில், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் இல்லை என சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

துரைசாமி – வித்யாசாகர் ராவ்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் பறிமாறப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றம்சாட்டினார். இது  தமிழக அரசியல் வட்டாரத்திலும் கல்வித்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையே அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளுநர், ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது தமிழக மக்களுக்கு எந்தவித பலனையும் அளிக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும்,  ஊழல் புகாருக்கு உள்ளானவர்களை ஆளுநர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பன்வாரிலால்

இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் இல்லை” என தெரிவித்தார். மேலும், “2017-ம் வருடம் மே மாதம் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முறைப்படி, தேர்வுக் குழுவில் உள்ள 3 பேரில் இருந்து தகுதியின் அடிப்படையில் என்னை தேர்வு செய்தார்” என்று துரைசாமி தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்கும் ஆளுநர், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என  குற்றம்சாட்டும் நிலையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி இவ்வாறு பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி