என் சகோதரன் உங்களை கைவிடமாட்டார்; அவரை பார்த்துக் கொள்ளுங்கள்! ராகுல் குறித்து வயநாடு தொகுதி மக்களுக்கு பிரியங்கா டிவிட்

டில்லி:

ன் சகோதரன் உங்களை விட்டுவிடமாட்டார்; அவரை பார்த்துக் கொள்ளுங்கள் என்று வயநாடு தொகுதி மக்களுக்கு அவரது  சகோதரி பிரியங்கா காந்தி டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உ.பி. மாநிலம் அமேதி தொகுதியில் போட்டி யிடும் நிலையில், 2வது தொகுதியாக கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிடுகிறார். இதை யொட்டி இன்று பகலில் தனது சகோதரி பிரியங்காந்தியுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், ராகுல்வேட்பு மனு குறித்து பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,எனது  சகோதரன், என் உண்மையான நண்பன், அவர் மிகவும் தைரியமானவர் என்பதும் எனக்கு தெரியும்…  அவரை வயநாட்டு மக்கள்  கவனித்துகொள்ளுங்கள்.. அவர் உங்களை கைவிடமாட்டார் என்று கூறியுள்ளார்.

பிரியங்காவின் டிவிட் வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: most courageous man, Priyanka tweet, Take care of him Wayanad
-=-