ஆர்.கே. நகரில் நானே வெல்வேன்!: டிடிவி தினகரன் நம்பிக்கை

சென்னை:

ர்.கே. நகரில் தொகுதியில் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நானே வெல்வேன் என்று சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை எட்டு மணிக்குத் துவங்கியது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இதுவரை ஆர்.கே. நகரில் வாக்குப்பதிவு சரியாக நடந்து வருகிறது  மக்கள் என்னை முழுமையாக நம்புகிறார்கள். ஆகவே நான் நிச்சயமாக வெல்வேன்” என்றார்.

மேலும் அவர், “ஜனநாயகத்தில் தேர்தல் என்பதுதான் அடிப்படை. ஆகவே தேர்தல் மீதும் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை வைப்போம்” என்றார்.

அதே நேரம்,” வாக்கு எந்திரங்கள் வரிசைப்படி இல்லாமல் திட்டமிட்டு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து  தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்.

மின்னணு இயந்திரத்தில் பிரச்சினை எதுவும் செய்ய முடியாது. ஆர்.கே. நகர் மக்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை ஜெயிக்க வைப்பார்கள். நான் வெற்றி பெற்றால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.