சோனியாகாந்தி பிறந்தநாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:

பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும்  குற்றத்தால் தனது  பிறந்தநாளை கொண்டாடவிழாவை கொண்டாடவில்லை என்று அறிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின்  இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு இன்று 73வது பிறந்த நாள். நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு அவர் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சோனியாகாந்திக்கு டிவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில், திருமதி சோனியாகாந்திக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள் கிறேன். அவரது தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சி நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் கூட்டாட்சிகளைப் பாதுகாப்பதில் முக்கியமான பங்களிப்புகளைச் செய்துள்ளது. அவர்  இன்னும் பல ஆண்டுகள் பொது சேவை செய்ய வாழ்த்துகிறேன்..

இவ்வறு அதில் தெரிவித்து உள்ளார்.