மும்பை: ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதை ஒருநாள் சாத்தியமாக்கிட வேண்டுமென்பதே தனது கனவு என்று கூறியுள்ளார் முகேஷ் அம்பானியின் மனைவி நிடா அம்பானி.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெம் 43வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில்(2020) உரையாற்றுகையில் அவர் இதை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, “எனது இதயத்தில் குழந்தைகளுக்கென்று எப்போதும் ஒரு தனியிடம் உண்டு. குழந்தைகள் கற்கும்போதும், விளையாடும்போதும், ஒரு சமூகங்கள் வளர்ந்து, நாடுகள் மிளிர்கின்றன.
எங்களைப் போன்று இளைஞர்களை அதிகம் கொண்ட சமூகத்தில், விளையாட்டு ஏற்படுத்தும் தாக்கம் பெரியது. கல்வி மற்றும் விளையாட்டுத் தொடர்பாக, ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிறுவனம், 21.5 மில்லியன் குழந்தைகளுக்கும் அதிகமாக சென்றடைந்துள்ளது.
நாட்டில், விளையாட்டிற்கு உகந்த ஒரு சூழலை உருவாக்கிட, நாங்கள் ஓயாது உழைத்து வருகிறோம். நமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் மற்றும் அந்த விளையாட்டை ஒருநாள் இந்தியாவி நடத்திட வேண்டுமென்பதும் எனது கனவு” என்றார் அவர்.