என்ஆர்சிக்கான ஆவணங்களை காண்பிக்க மாட்டோம்: காங். தலைவர் அஜய் மேக்கன் திட்டவட்டம்

டெல்லி: தேசிய குடியுரிமை தொடர்பான எந்த ஆவணங்களையும் காண்பிக்க மாட்டோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மேக்கன் கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக ஒரு டுவிட்டர் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர்  கூறி இருப்பதாவது:

என் மனைவி ராதிகா, மகள்கள் ஆருஷி, அகானா, மகன் அஜஸ்வி மற்றும் நான் என அனைவரும் முடிவு செய்துள்ளோம். எங்கள் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் என்ஆர்சிக்கு தேவையான ஆவணங்களை காண்பிக்க மாட்டோம் என்று தீர்மானமாக கூறி இருக்கிறார்.

முன்னதாக, குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட போது, அஜய் மேக்கன் மனனவி மற்றும் குழந்தைகள் கைது செய்யப்பட்டனர்.