பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளது, அவர் குணமடைய பிரார்த்தியுங்கள்…

டெல்லி: உடல்நலப் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சையில் உள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக தொடர்ந்த நிலையில், தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது, அவர் குணமடைய பிரார்த்தியுங்கள் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
84 வயதான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா பாதிப்பு  காரணமாக கடந்த 10ம் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை திடீரென கவலைக்கிடமானது. அவருக்கு  வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,  தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் அபிஜித் முகர்ஜி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  “உங்கள் அனைத்து நல்வாழ்த்துக்களாலும், மருத்துவர்களின் தீவிரமான முயற்சியிலும், என் தந்தையின் உடல் உறுப்புகள் சீராக இயங்கு வதால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது முக்கிய அளவுருக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தின் அறிகுறிகள் கவனிக்கப்பட்டு வருகின்றன! அவர் விரைவாக குணமடைய நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.