எனது தந்தையின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் : எஸ் பி பி சரண

சென்னை

பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில்  நல்ல முன்னேற்றம் உள்ளதாக அவர் மகன் சரண் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 5 ஆம் தேதி அன்று தனியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  மூச்சுத் திணறல் காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்தது.

சுமார் 3 தினங்களுக்கு முன்பு அவர் உடல் நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு மயங்கிய நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.   இதனால் கலக்கமடைந்த அவரது ரசிகர்கள் பலர் அவர் உடல் நிலை தேற கூட்டுப்பிரார்த்தனைகள் நடத்தினர்.

இன்று மதியம் பாலசுப்ரமணியம் மயக்கத்தில் இருந்து மீண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.   அவரது மகன் எஸ்பிபி சரண் “தனது தந்தையின் உடலில் முன்பைவிட முன்னேற்றம் தெரிவதாகக் கூறி உள்ளார்.   மேலும் எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு தற்போது சுவாசிப்பதில் முன்பிருந்ததை விட சிரமம் குறைந்துள்ளதாகவும் சரண் தெரிவித்துள்ளார்.