ரிச்சர்ட் பிரான்சனின் முன்னோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா?

சென்னை: உலக அளவில் செல்வாக்கு மிக்கவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சன் தனக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து  தற்போது பேசியுள்ளார்

அவர் ஒரு பகுதியாக சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டியிருந்ததாகவும் அப்போது அந்த சோதனையின் முடிவில் அவரது எள்ளுப் பாட்டி ஒரு இந்தியர் என்பதை கண்டுபிடித்ததாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் தனது பூர்வீக வேர் இருப்பதாக அவர் கூறுகையில், “1793 முதல், நாங்கள் நான்கு தலைமுறைகள் இங்கு கடலூரில் வாழ்ந்து வருகிறோம்,” என்றார்.  “நான் ஒரு இந்தியரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், நாங்கள் உறவினர்களாக இருக்கலாம் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்,”

என்றார் பிரான்சன். அவரது இந்தியா இணைப்பைக் கொண்டாட, வெர்ஜின் அட்லாண்டிக் , இந்தியாவுக்கான புதிய ஐகான் “அரியா“ என்று பெயர் . சூட்டப்பட்டுள்ளது, இவ்வாறுதான் பிரான்சனின் எள்ளுப் பாட்டி அழைக்கப்பட்டார்.

ரிச்சர்ட் பிரான்சன் பிரிட்டனிலுள்ள ஒரு பிரபல வியாபார காந்தம் ஆவார். அவர் தனது தன்னம்பிக்கை மற்றும் கடும் உழைப்பால் 1970 ல் துவங்கப்பட்ட வெர்ஜின் என்ற பெருநிறுவனத்தின் மூலமாக தற்போது 400 கம்பெனிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். மேலும், அவர் ஒரு நூலாசிரியரும், நடிகரும் என் பன்முகம் கொண்டவர்

அவர் இன்னும் பல துறைகளில் கோலோச்சினாலும் பரோபகார நடவடிக்கைகளின் மூலமாகவே அதிகம் பேசப்படுகிறார். பல்வேறு துறைகளையும் உலக அளவில் கொண்டு சேர்க்க அவர் வழிவகுத்தது அவரது முயற்சியில் இன்னொரு மைல்கல்லாகும்