சென்னை,
திமுக பொதுச்செயலாளர்  பதவிக்கு போட்டியிட விரும்ப மனு அளிக்க வந்த தனது கணவரை தாக்கியவர்ளை சும்மா விடமாட்டேன் என்று சசிகலாபுஷ்பா எம்.பி. ஆவேசமாக கூறினார்.
மேலும் எனது கணவரின் உடலுக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தமிழக காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இன்று அதிமுக செயற்குழு பொதுக்கூட்டம் வானகரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக பொதுச்செயலாளராக  சசிகலா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக ஜெ.வின் தோழி சசிகலா தேர்வு செய்யப்படுவதற்கு அதிமுக தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அதிமுகவை சேர்ந்த சசிகலாபுஷ்பா எம்.பி.யும் எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று கூறி யிருந்தார்.
இதற்கிடையில் நேற்று ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு விருப்ப மனு அளிக்க சசிகலாபுஷ்பா கணவர் தனது வழக்கறிஞர்களு டன் வந்தார். அவரை அங்கிருந்தவர்கள் கடுமையாக தாக்கினர்.

இந்த தாக்குதலில் லிங்கேஸ்வர திலகனுக்கு தலை மற்றும் உடம்பில் பலமான காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு மூக்கு உடைப்பட்டு ரத்தம் பீறிட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை போலீசார் மீட்டு மைலாப்பூர் காவல்நிலையம் அழைத்துச்சென்று, பின்னர்  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்தத் தாக்குதலைப்பற்றி சசிகலா புஷ்பா எம்.பி கூறுகையில்,
“அ.தி.மு.க. பொதுச்செயலாளராக விருப்ப மனு தாக்கல் செய்ய, என் கணவர் சென்றபோது, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். சசிகலாவின் தூண்டுதல் பேரில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
எனது கணவர் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில்  போலீசார் அழைத்து செல்வதை டிவி.யில் பார்த்த நான் அதிர்ந்து போனேன்.
உடனே எனது வக்கீல் உதவியுடன் காவல் நிலையம் மற்றும் மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்டேன். ஆனால், எங்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்று கூறிவிட்டனர். போலீசார் எனது கணவர் தாக்கப்படும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர்.
எனது கணவரின் உடலுக்கும், உயிருக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தமிழக காவல் துறைதான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த பிரச்சினையை நான் சும்மா விடமாட்டேன்.
ஒன்றரை கோடி தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தேடுக்கப்பட வேண்டிய பொதுச்செயலாளார் பதவியை, குறுக்கு வழியில் கைப்பற்றியுள்ளார் சசிகலா.
என்று கர்ஜித்தார் சசிகலாபுஷ்பா.