நான் நடிப்பதற்கு புகுந்த வீட்டில் தடை செய்யவில்லை : சமந்தா

சென்னை

பிரபல நடிகை சமந்தா தாம் நடிக்க தனது புகுந்த வீட்டினர் தடை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

தென் இந்திய திரையுலகில் புகழ் பெற்று விளங்கும் நடிகை சமந்தாவுக்கும் பிரபல நடிகர் நாக சைதன்யாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.   நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.   திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தாவின் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள் வெற்றி அடைந்துள்ளன.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமந்தா, “நான் எப்போதும் வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.  எனக்கும் அதிர்ஷ்டவசமாக அவ்வாறே கிடைக்கின்றன.   இதுவரை கடவுள் எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்துள்ளார்.    இனியும் கொடுப்பார்.

திருமணத்துக்கு பிறகு நான் நடிக்க மாட்டேன் என பலரும் நினைத்தனர்.   ஆனால் என்னுடைய புகுந்த வீட்டினர் இந்த திரையுலகை நன்கு புரிந்தவர்கள் என்பதால் நான் நடிக்க தடை செய்யவில்லை.    அதனால் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன்.   சொல்லப் போனால் எனது திருமணத்துக்குப் பின் எனக்கு வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

தற்போது திரை உலகில் தவறுகள் நடப்பதாக பேசி வருகின்றனர்,  தவறு இல்லாத துறைகள் இல்லை.    என்னைப் பொறுத்தவரை நான் நல்லவளாக இருக்கிறேன்.   ஒரு குடும்பத்தில் ஒருவர் குடிகாரராக இருந்தால் அந்த குடும்பமே குடிகார குடும்பமா? அது போலத்தான் இதுவும்” எனக் கூறி உள்ளார்.

You may have missed