டெல்லி: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாயார் காலமானார். இதையொட்டி மத்தியஅமைச்சர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மோடி தலைமையிலான மத்தியஅரசில்  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருப்பவர் ரவிசங்கர் பிரசாத். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரா இவர் வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார். கடந்த  2014ம் ஆண்டு முதல் மத்தியஅமைச்சரவையில் பங்கேற்றுள்ளார்.  மத்திய   சட்டம் & நீதித் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகங்களின் அமைச்சராக உள்ளார்.

ஏற்கனவே  2001ல் வாஜ்பாய் தலைமையிலான தேஜகூ அரசில் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சராகவும்,  2002ல் கூடுதல் பொறுப்பாக நீதித் துறை வழங்கப்பட்டபோது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வந்தார். தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார்.பாஜகவின்  தேசிய தலைமைச் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.

இவரது தாயார் பிம்லா பிரசாத் (Bimla Prasad) வயது முதிர்வு காரணமா உடல்நலம் குன்றியிருந்த நிலையில் நேற்று இரவு காலமானதாக, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டிவிட் பதிவிட்டுள்ளார்.

மேலும், என் அம்மா ஆழ்ந்த பக்தியுள்ள பெண்மணி மற்றும் மிகுந்த நம்பிக்கையுள்ள பெண்மணி. ஆரம்பத்தில் இருந்தே கட்சியை ஆதரிப்பதில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.