எனது வாழ்க்கையில் அடுத்த பெரிய மாற்றம்: தனது திருமணம் குறித்து விஷால் டிவிட்…

டிகர் விஷால் தனது திருமணத்தை உறுதி செய்து டிவிட் செய்துள்ளார். அதில், எனது  வாழ்க்கை யில் அடுத்த பெரிய மாற்றம். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று மகிழ்ச்சிகரமாக தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் விஷால் ரெட்டிக்கு  திருமணம் நிச்சயம் செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. அதைத்தொடர்ந்துஅவரது மனைவியாக வரப்போகும் அனிஷா ரெட்டி குறித்த தகவல்கள் வெளியானது. இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடை பெற்று முடிந்த நிலையில், அவரது புகைப்படத்தை நடிகர் விஷால் வெளியிட்டு உள்ளார்.

தென்னிந்திய திரைப்பட சங்கத்தலைவராக உள்ள நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவராக வும் இருந்து வருகிறார். நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்ட பிறகே தனது திருமணம் நடைபெறும் என அறிவித்த நிலையில்,  நடிகர் சங்க கட்டிட வேலைகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

விஷால் மணக்கப்போகும் பெண் அனிஷா

இந்த நிலையில், நடிகர் விஷால் தனது திருமணத்தை உறுதிப்படுத்தி டிவிட் செய்துள்ளார். அதில், ஆம் .. மகிழ்ச்சி. மிகவும் மகிழ்ச்சி.  அவளுடைய பெயர்  அனிஷா அல்லா. திருமணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனது வாழ்க்கையில்  அடுத்த பெரிய மாற்றம். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும்… கடவுள் ஆசிர்வதிக்கட்டும்  என்று டிவிட் செய்துள்ளார்.