கட்சி பெயர், கொள்கைகளை விரைவில் வெளியிடுவேன்!! கமல்

டில்லி:

எனது புதிய அரசியல் கட்சியின் பெயர், கொள்கைகளை விரைவில் வெளிடுவேன் என்று நடிகர் கமல் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது அரசியல் தொடர்பான பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். கேரளா முதல்வர் பினராய் விஜயன், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இன்று டில்லிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கூறுகையில், ‘‘அரசியலுக்கு வரும் தைரியம் எனக்கு இருக்கிறது. தோல்வி பயம் இல்லை. எனது கட்சி பெயர், கொள்கைகளை விரைவில் வெளியிடுவேன்.

பாஜக, காங்கிரசுடன் கொள்கை ரீதியான கூட்டணி வைக்கமாட்டேன், தமிழகத்தின் நலன் கருதி கூட்டணி வைக்கலாம்.  தமிழக அரசியலில் என்னை முன்னிறுத்தாமல் மாற்றத்தை முன்னிறுத்துகிறேன், மாற்றத்தை விரும்புகிறவர்கள் என்னை ஆதரிப்பார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி