சட்டமன்றத்தில் எனது ஆதரவு தெரியும்! ஓபிஎஸ் பேட்டி

சென்னை,

தற்போது செய்தியாளர்களை சந்தித்து வரும் ஓபிஎஸ் கூறியதாவது,

இன்று காலை 10.45 மணிக்கு தனது கிரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ,

ராஜினாமாவை திரும்ப பெற வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டால் திரும்ப பெறுவேன்.

அதிமுகவுக்கு எந்தநிலையிலும் துரோகம் செய்யவில்லை. காலம்தான் உரிய பதில் சொல்லும்.

சட்டமன்றம் கூடும்போது எனக்கான ஆதரவு குறித்து தெரிய வரும்.

பாரதியஜனதா என்னை இயக்குவதாக கூறப்படுவது வடிகட்டிய பொய் என்றார்.