மனைவி, மகள் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர்: அப்ரிடி தகவல்

--

இஸ்லாமாபாத்: தமது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளதாக பாக். முன்னாள் கேப்டன் அப்ரிடி கூறி உள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி. 40 வயதான அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இந்நிலையில் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: மனைவியும், 2 மகள்களான ஆசனா மற்றும் அக்ஸாவிற்கு முன்னதாகவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது .

2வது சோதனை முடிவில் மனைவி மற்றும் எனது குழந்தைகளுக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது. நாங்கள் குணமடைய தொடர்ச்சியாக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. உங்களை கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும், குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க இருக்கிறேன் என்று கூறி உள்ளார்.