மியான்மர்: 
மியான்மரில் மீண்டும் முழுஅடைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால் மியான்மரில் முழுஅடைப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 120 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்போது மொத்தமாக மியான்மரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,000 தாண்டியுள்ளது.
கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் வசிக்கும் மியான்மரின் பெரிய நகரமான யாங்கோனில், வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முழு அடைப்பை நீட்டித்து அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மியான்மரில் இப்போது மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,009 ஆக உள்ளது, மேலும் 14 கொரோனா இறப்புகளை மியான்மர் பதிவு செய்துள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு மியான்மரின் மேற்கு மாநிலமான ராகின்ல் மீண்டும் கொரோனா வைரஸ் மற்றும் பரவ துவங்கியுள்ளது.
மியான்மரில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததால், மியான்மர் அரசு சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது, ஆனால் இப்போது வைரஸ் மீண்டும் பரவுவதால் அதிகாரிகள் மீண்டும் தடை விதித்துள்ளனர். மக்கள் அவசர வேலை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும், தேவையில்லாத பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செப்டம்பர் இறுதி வரை உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப் படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் பெரிய நகரமான யங்கோன் மற்றும் தலைநகரான நெய்பீடாவிற்க்குள் எவரும் நுழையகூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மட்டுமே யாங்கோனில் திறந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.